News Just In

3/24/2021 12:14:00 PM

இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் வாக்களித்தது இலங்கையில் கொண்ட வெறுப்பு அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக அத்துமீறல் காரணமாகவே என்பதை நாம் அறிந்து கொண்டோம்!!


எப்.முபாரக்
ஐக்கிய நாட்டு மனித உரியமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் வாக்களித்தது இலங்கையில் கொண்ட வெறுப்பு அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக அத்துமீறல் காரணமாகவே என்பதை நாம் அறிந்து கொண்டோம் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வாக்கெடுப்பு தொடர்பாக கேட்ட போதே அவர் இன்று(24) இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் எப்போதும் ஐக்கிய நாடுகளில் அங்கத்துவம் பெறுகின்ற நாடுகளை ஏமாற்ற முடியாது.தகுந்த சந்தர்ப்பங்கள் வருகின்ற போது வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார்கள்.
இலங்கைக்கு எதிரான இந்த வாக்கெடுப்புக்களை ஒரு பாடமாக கருதி செயற்பட வேண்டும்.

இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
அந்த செயற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை அரசு தீர்மானங்களை பெற வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கம் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்,தவறும் பட்சத்தில் நம் நாடு பாரிய பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும், நாம் இலங்கையர் என்ற ரீதியில் இந்த எதிர்புக்கு ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

No comments: