News Just In

2/01/2021 12:16:00 PM

மட்டக்களப்பு மாநகர சபைக்கு LED மின்குமிழ்கள் கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனால் வழங்கி வைக்கப்பட்டது!!


மட்டக்களப்பு- கல்லடி பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் திருக்கோயில் புதுப் பொலிவு பெற்று நடைபெறும் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபைக்கு LED மின்குமிழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தஜீ மஹராஜ் அவர்களால் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களிடம் நேற்று (2021.01.31) குறித்த 25 LED மின்குமிழ்களும் கையளிக்கப்பட்டது.

குறித்த மின்குமிழ்கள் அனைத்தும் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தடி முதல் நாவற்குடா வரையுள்ள பிரதான வீதியில் பொருத்தும் நடவடிக்கையை மட்டக்களப்பு மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.















No comments: