News Just In

2/01/2021 12:47:00 PM

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை!!


இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று(திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்கவிடுமாறு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களின் கட்டடங்களை எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் ஒளி விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments: