மட்டக்களப்பு கல்குடா செங்கலடி மத்திய கல்லூயரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவுலின் 164 ஜனனதினத்தினமான இன்று மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் கு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வானது காலை 08.30 மணியளவில் செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
1857.02.22 பிறந்த சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவுலின் 164 வது ஜனனதினம் உலகலாவியரீதியில் இன்று கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில் நாடளாவியரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும்திட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. அதன் ஒருபகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்துகல்வி வலயங்களிலுமாக மரநடுகை இடம்பெற்று வருகின்றது.
இதனொரு கட்டமாக கல்குடா கல்வி வலயத்திற்கான மரநடுகை நிகழ்வு மட்.ககு. செங்கலடி மத்திய கல்லூரியில் 10 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முதலாவது மரக்கன்றினை கல்குடா கல்விவலய சாரணியப்பொறுப்பாசிரியரும் சேவைக்கால ஆலோகரருமான எஸ்.ரமேஸ் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டதுடன்இ இரண்டாவது மரக்கன்றினை செங்கலடி பாடசாலையின் அதிபர் கு.அருணாசலம் அவர்கள் நாட்டி வைக்க தொடர்ச்சியாக பாடசாலையின் உப அதிபர் கே.குகதாசன் மற்றும் சாரண ஆசிரியர் எஸ்.டிலக்சன் ஆகியோரும் நிகழ்வில் மரங்களை நாட்டிவைத்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் செங்கலடி மத்திய கல்லூரி, வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் சாரண மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.










No comments: