மட்டக்களப்பு நகரின் மையப் பகுதியில் முச்சக்கர வண்டி மீது தனியார் பயணிகள் பஸ் மோதியதில் முன்பள்ளிச் சிறுமியும் சிறுமியின் தந்தையும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை பரபரப்பான பாடசாலை நேரத்தில் மட்டக்களப்பு நகர மணிக்கூட்டுக் கோபுர சுற்று வளைவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய தனியார் பயணிகள் பஸ் வண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பள்ளிச் சிறுமியின் தந்தையே தனது முச்சக்கர வண்டியில் தனது மகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளார் இவ்வேளையிலேயே தனியார் பயணிகள் பஸ் முச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments: