News Just In

2/25/2021 08:38:00 AM

வெளிநாட்டு தொழிலுக்கு எதிர்பார்ப்பவர்களை குறி வைத்து பல்வேறு மோசடி நடவடிக்கைகள்- சிக்கிக்கொள்ள வேண்டாம் என அறிவிப்பு!!


வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பரங்கள் பதிவிட்டு வெளிநாட்டு தொழிலுக்கு எதிர்பார்ப்பவர்களை குறி வைத்து பல்வேறு மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பணியகம் அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர்கள், பத்திரிகைககள், தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்ற ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்டரீதியான விளம்பரங்களை வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளதென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அல்லது தகவல்களை வெளியிடுவதற்கு பணியகம் ஒப்புதல் அளிக்கவில்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது பணியக சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற சமூக ஊடக விளம்பரங்களுக்கு பதிலளிக்க வேண்டாம். அவற்றில் வெளியிடப்பட்ட தவறான தகவல்களை ஏற்க வேண்டாம் என பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

No comments: