News Just In

2/25/2021 02:30:00 PM

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்..!!


க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை காரியாலம் மற்றும் பிராந்திய காரியாலயங்கள் நாளை (26) திறக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பத்தரமுல்லையிலுள்ள ஆட்பதிவு திணைக்கள தலைமையகமும், காலி, குருணாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள பிராந்திய காரியாலயங்களும் நாளை திறக்கப்பட்டிருக்கும்.

No comments: