News Just In

2/25/2021 05:07:00 PM

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி..!!


நாட்டின் பல பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி தெஹிவளையில் உள்ள மக்களுக்கு தெஹிவளை எம்.எம்.சி வளாகத்தில் நாளை முதல் தடுப்பூசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை நகராட்சி மன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவுற்றதன் பின்னர், 30-60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, 26ஆம் திகதி நெதிமாலையில் வசிக்கும் மக்களுக்கும் 27ஆம் திகதி சர்னங்கர வீதி, 28ஆம் திகதி கொஹுவலையில் வசிப்போருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதேநேரம், மார்ச் 2ஆம் திகதி பார்க் வீதி, 3ஆம் திகதி தெஹிவளை கிழக்கு, 5ஆம் திகதி கொஹுவலை கிழக்கு பகுதியில் வசிப்போருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொவிட்19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் கொழும்பு மாவட்ட மக்களை கொவிஷீல்ட் தடுப்பூசி பெற பின்வரும் அதிகாரிகளில் ஒருவரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி அவர்கள் வைத்தியர் தம்மிக ஜெயலத் 011 2437154, 071 4397939 மற்றும் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எல்.டி.எஸ்.விஜயமுனி 0112691922 ஆகியோரை தொடர்புகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: