மட்டக்களப்பு மாட்டத்தில் நன்னீர் மீன்வளர்ப்பை மேற்கொள்ள நிபுணர்களின் ஆலேசனைகளைப் பெற்றுக் கொள்ளும் விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முதலைக்குடா மகிழடித்தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் விசேட செயலமர்வு மாவட்ட செயலாளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23.02.2021) மண்முனைப்பற்று டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வேலைத் திட்டத்தினை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் நவீனமுறையில் இறால் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசின் விசேட திட்டத்தினடிப்படையில் முதலைக்குடா மகிழடித்தீவு பகுதிகளில் இனங்காணப்பட்ட சுமார் 202.343 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்புத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எஸ். சந்திரகாந்தன் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிரந்தனர்.
நிபுணத்துவ ஆலோசகர்களாக கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தலைவர் கலாநிதி சீ.ஜீ. தேவதாசன், தேசியநீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாணத்திற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் வீ. நிருபராஜ், கைத்தொழில் சார் அனுபவமுள்ள பொது முகாமையாளர் சாமிந்த பெர்னாண்டோ, கிழக்குப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை தலைவர் பேராசிரியர் பீ. பிரேமானந்தா உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள் பலரதும் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினர்.

















No comments: