கலாநிதி. புளோரன்ஸ் பாரதி கென்னடியின் வரவேற்புடனும் "கா" பதிப்பாசிரியர் ச.மணிசேகரன் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நூலினை வெளியீட்டு வைத்தார்.
மட்டு. தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி முதற் பிரதியும் சீனித்தம்பி அந்தோனி ஜீவரெத்தினம் சிறப்பு பிரதியும் பெற்றுக்கொண்டதுடன், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்டினா பிரான்சிஸ் நூலறிமுகத்தினையும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) த.யுவராஜன் சிறப்புரையினையும், நூலாசிரியர் ஏற்புரையினையும் ஆற்றியிருந்தார்.
No comments: