News Just In

2/07/2021 02:33:00 PM

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; விவசாய துறை அமைச்சு தெரிவிப்பு..!!


உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

விவசாய துறை அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு 22 சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பங்குகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவை 35 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் கூறியுள்ளார்.

No comments: