இதன்போது வீதிகளில் முககவசம் அணியாது பயணித்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உபதேசம் வழங்கி எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நளனசிறி தலைமையில் பொலிஸ் குழுவினர் இந்த திடீர் விசேட சோதனை நடவடிக்கை நேற்று மாலை 06.00 மணிக்கு காத்தான்குடி நகர் வீதி சமிக்ஞை சந்தியில் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீதியால் மோட்டர்சைக்கில் முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களில் முகக்கவசம் அணியாது பயணித்த சுமார் 50க்கும் மேற்பட்டோரை பிடித்து சுமார் அரைமணிநேரம் தடுத்துநிறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் பொது சுகாதார அதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய பெறுப்பதரிகாரி அவர்களுக்கு உபதேசம் வழங்கி முககவசம் அணியாது பயணித்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்து அவர்களை விடுவித்துள்ளனர்.




No comments: