News Just In

2/20/2021 07:56:00 PM

மட்டக்களப்பு மாநகர முதல்வரிடம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரணியில் கலந்து கொண்டமைக்காக விசாரணை!!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான சாத்வீக மக்கள் பேரணியில் கலந்து கொண்டமைக்காக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மீது 19.02.2021 அன்று அவரது அலுவலகத்தில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை நடாத்தி வாக்கு மூலத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வன்முறையற்ற சாத்வீகப் பேரணியில் தாம் எந்தவொரு இடத்திலும் வன்முறைகள் ஏற்படாத விதத்தில் பொறுமையுடன் பேரணியில் கலந்து கொண்டதாகவும் இருப்பினும் பொலிசாரால் பல தடையுத்தரவுகள் பிரதேசத்திற்கு பிரதேசம் பிறப்பிககப்பட்ட வண்ணம் இருந்ததாகவும் அதற்கமைய குறித்த தடை உத்தரவுகள் தொடர்பான விசாரணயினை பொலிசார் அலுவலகத்தில் வைத்து மேற்கொண்டு வாக்குமூலமாக பெற்றுக்கொண்டதாகவும் அவர்களது கேள்விகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

No comments: