News Just In

2/06/2021 09:24:00 AM

நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்காலில் பத்திரமாக மண்எடுத்து சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்..!!


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களால் இறுதிப்போரில் மக்களின் குருதி உறைந்த முள்ளிவாய்க்கால் மண் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையனா தமிழர் உரிமைகோரிய பேரணி இன்று மாலை முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தினை சென்றடைந்துள்ளது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுத்தூபி அமைப்பதற்கான மண் எடுக்கப்பட்டுள்ளது.

மதகுருமாரின் கையால் எடுத்து கொடுக்கப்பட்ட மண்ணுடன் பல்கலைக்கழக மாணவர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியுடன் தொடர்ந்து செல்கின்றார்கள்.

புனிதமான மண்ணினை வைத்து யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத்தூபியில் வைத்து கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





No comments: