News Just In

2/06/2021 09:02:00 AM

நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாள் பேரணி இன்று வவுனியாவில் இருந்து முன்னெடுப்பு..!!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாள் பேரணி இன்று வவுனியாவில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பேரணி நேற்று மாலை வவுனியா நகரை வந்தடைந்திருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றும் காணி அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் ஆகியவற்றுக்கு நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் பேரணி மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேரணிகளை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த ஆட்சிகாலத்தில் ஏன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனது என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் என் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments: