News Just In

12/05/2020 07:12:00 AM

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட மாணவன் சேற்றில் புதையுண்டு உயிரிழப்பு; யாழ் கரவெட்டி பகுதியில் நடந்த துயரச் சம்பவம்..!!


யாழ். கரவெட்டியில் குளக் கழிவுகளை அகற்றிய மாணவன் சேற்றில் சிக்கி இன்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கடுக்காய் - கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயர்தரம் கற்கும் குறித்த மாணவன் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுணுவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்தார் என்றும், அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கைகைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

No comments: