News Just In

12/21/2020 09:52:00 AM

நேற்று 594 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 37000ஐக் கடந்தது: மேலும் 05 பேர் உயிரிழப்பு!!


இலங்கையில் நேற்றைய தினம் மொத்தமாக 594 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 37,261 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 554 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 38 பர் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்தும், இருவர் வெளிநாட்டிலிருந்தும் வருகை தந்தவர்கள் ஆவர்.

அதனால் பேலியகொட - மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 33,590 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 715 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 28,267 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 438 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை நேற்றிரவு கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் ஐந்து உயிரழப்புகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. அதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் இலங்கையில் 176 ஆக உயர்வடைந்தது.

No comments: