News Just In

11/22/2020 08:02:00 AM

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவல்!!


இலங்கையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளைக் காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பொறளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனி வீதி ஆகிய பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களும் நாளைக் காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: