News Just In

11/25/2020 08:35:00 AM

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை- சாரதிகள் குற்றச்சாட்டு!!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்கு போதுமான சுகாதார பாதுகாப்பு வசதிகள் தமக்கு வழங்கப்படவில்லை என சுவசரிய நோயாளர் காவு வண்டிகளின் சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு 1990 சுவசரிய சேவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வாறு கொரோனா நோயாளர்களை அழைத்துச் செல்லும்போது பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு முறைமைகள் தங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என சுவசரிய சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: