இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் மாவட்ட செயலகத்தின் புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த தனபாலசிங்கம் நிசாந்தன் (வயது-30) என்பவர் ஆவார்.
கடந்த 13 ஆம் திகதி மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் கைக்கிளும் தள்ளாடி சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்களில் பயணித்த குறித்த உத்தியோகத்தர் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 11 தினங்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments: