News Just In

11/05/2020 07:18:00 AM

மட்டக்களப்பு- ஏறாவூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


மட்டக்களப்பு- ஏறாவூர் பொது சுகாதார உத்தியோகஸ்தர் பிரிவில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்படும் மீன்களை விற்பனை செய்தவரெனவும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: