News Just In

11/02/2020 03:24:00 PM

வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!!


இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வீடுகளுக்கே விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மீள அனுமதி வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது அல்லது நாளைய தினம் குறித்த விநியோக சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆகவே பொதுமக்கள் தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும், ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: