News Just In

11/02/2020 03:49:00 PM

பொது மக்கள் உணவகங்களில் அமர்ந்திருந்து உணவுண்பதற்கு முற்றாக தடை...!!


யாழ்ப்பாண மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் பொது மக்கள் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்த வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட் அறிவித்துள்ளார்

யாழ்.மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 
“யாழ்.மாவட்டத்தில் கொரோனா மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடின், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள் உட்படுத்தப்படுவார்கள்.

மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். யாராவது வந்தால், உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல்விடுக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும், பேருந்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்.

எமது பேருந்துகளைப் கூட கட்டுப்படுத்தியிருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு எந்தத் தடையையும் நாங்கள் தற்போது விதிக்கவில்லை. உணவகங்களில் மக்கள் அமர்ந்திருந்து உண்ணுவதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் தயாரித்த உணவை,பொதிகள் மூலம் வழங்குவதற்க வேண்டும் என யாழ்.மாநகரசபை சகல உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.

உணவக உரிமையாளர்கள் இந்த நடைமுறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது மக்கள் உணவகங்களில் அமர்ந்திருந்து உண்ணுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்த நடைமுறைகளைப் கண்காணிப்பதற்கு, பொலிஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நகரப் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க தவறினால், அந்தப் பகுதிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த உத்தேசித்துள்ளோம்.

இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க நேர்ந்தால், அத்தியவசிய பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு விசேட அனுமதி வழங்கவுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டத்தை முன்னெடுப்பதற்கும், ஆலோசித்து வருகின்றோம்.

நிலமை மோசமடைந்தால், இந்த நடைமுறைகளை கொண்டு வருவதற்கும், சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம்” என்றார்.

No comments: