ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு கிலோ மீட்டர் வீதி அமைக்கும் விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனை புதியவளனார் வீதி புதிதாக நிர்மாணிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேண்டுகோளில் வீதி அபிவிருத்தி பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் அங்கீகாரத்தில் இந்த புதிய வீதி அமைப்புக்காக சுமார் ஐந்து கோடியே 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த புனிதவளனார் வீதியினை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு நேற்று(2 1) காலை நடைபெற்றது. வீதிஅபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திருமதி.கலைவாணி வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விசேட நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த இந்த விசேட நிகழ்வில் சமயதலைவர்கள், வீதி அபிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரிகள் ,முற்போக்கு தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இங்கு கருத்து வெளியிடுகையில்; இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் இன்றைய அரசாங்கம் இந்த நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகின்றது இதனூடாக தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்துகொள்ள நாம் ஒன்றுபட வேண்டும் எனக் கூறினார்.










No comments: