News Just In

11/23/2020 02:22:00 PM

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு!!


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கினை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் சூம் (ZOOM) தொழில்நுட்பம் ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இதன்போது பிரசாந்தனை எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை – பிரசாந்தன், கடந்த 9ம் திகதி சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: