News Just In

11/26/2020 06:44:00 PM

பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டது!!


இலங்கையில் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சுக்களின் விடயதான மாற்றங்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

தமது சுபீட்சத்திற்கான நோக்கு கொள்கைத் திட்டத்தில் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை நிதர்சனமாக்குவதே ஜனாதிபதியின் பிரதான நோக்காகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நூற்றாண்டு தொழில்நுட்பத்துடனான பொருளாதார அபிவிருத்தியில் பயணிப்பதனால் அதனை நோக்கி இலங்கையின் அபிவிருத்தியை வழிநடத்துவதும் ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: