News Just In

11/26/2020 06:30:00 PM

சற்று முன்னர் மேலும் 342 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 21811ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் 342 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18ஆயிரத்தைக் கடந்து 18 ஆயிரத்து 280ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தைக் கடந்து 21 ஆயிரத்து 811ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 369பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 15 ஆயிரத்து 447பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 899 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: