News Just In

11/22/2020 06:10:00 PM

வெகுஜன ஊடகங்களுக்கான ஒழுங்குபடுத்தல் அவசியம்- வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்!!


இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.

இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஊடக அமைச்சு சார்ந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களினது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் சேறுபூசும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வெகுஜன ஊடகங்களுக்கான ஒழுங்குபடுத்தல் அவசியம் எனவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத்.பீ.விஜேவீர தெரிவித்துள்ளார்.

குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இசுறு தொடாங்கொட குணதிலக்க ராஜாப்ஷ சாகர காரியவசம் ஜயந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments: