News Just In

11/26/2020 10:39:00 AM

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை 27.11.2020 காலை 9.30 மணிக்கு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் மறு வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அந்த வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையின் மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி; இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.


No comments: