News Just In

11/26/2020 01:40:00 PM

மட்டக்களப்பு பட்டதாரிகளின் வேண்டுகோள் பரிசீலனை!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டாதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர். அவர்களது விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட செயலக ஊடகப் பிரிவு வியாழக்கிழமை 26.11.2020 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 123 பட்டதாரிகளும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பட்டதாரிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இதுதவிர களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 57 பேரும், ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 31 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 26 பேரும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 25 பேரும், காத்தான்குடி மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 22 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 15 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 12 பேரும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 11 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 10 பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2088 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், 1966 பட்டதாரி பயிலுனர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையினைப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: