News Just In

11/23/2020 10:04:00 AM

இளம் ஊடகவியலாளர் சந்திரமதியின் இறுதிக் கிரியை இன்று..!!


திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் இன்று (23-11-2020) இடம்பெறவுள்ளன. அவரது சொந்த ஊரான கண்டியில் இன்று இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்சாலையில், மக்கள் அஞ்சலிக்காக நேற்று நள்ளிரவு (22-11-2020) வைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் கொண்டு சென்று, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, மாலை இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன.
சக்தி நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் கடந்த 4 வருட காலமாக சந்திரமதி குழந்தைவேல் கடமையாற்றியிருந்தார்.

No comments: