23 ஆவது உலக மீனவ தினத்தை முன்னிட்டு 'நீலப்பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மக்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பலமான சமூக இயக்கத்தை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் அமைந்த அம்பாறை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு அம்பாறை மாவட்டம் பொத்துவில் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட மீனவ பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (21) இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் எம்.எச்.முபாறக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸீத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், பேரவையின் இணைப்பாளர் கே.இஸ்ஸதீன், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ், மீனவ பேரவையின் பிரதேச இணைப்பாளர் கே.கண்ணன், பொத்துவில் பிரதேச கடற்தொழில் பரிசோதகர் எம்.ரீ.ஜவ்பர் உள்ளிட்ட மீனவ அமைப்புக்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அரசாங்கத்தின் நீலப் பசுமைப் பொருளாதாரக் கொள்கையினால் மீனவ சமூகத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள், மீனவ சமூகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அதிதிகளின் உரைகள் இடம் பெற்றதுடன் ஏனைய மாவட்டங்களின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளின் காணொளி மூலமான கலந்துரையாடல்களும் இடம் பெற்றன.
நிகழ்வில், மாணவிகளின் அழகிய இசை நடனம் இடம் பெற்றதுடன், மீனவ சமூகத்தின் உயர்வுக்காக உதவி வழங்கி, ஒத்துழைப்பு நல்கிய பிரதேச ஊடவியலாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா மற்றும் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.






No comments: