News Just In

10/25/2020 06:07:00 AM

மட்டக்களப்பு- வாழைச்சேனை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு- மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு...!!


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாளிகாவத்தை, வாழைத் தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோரப் பகுதி பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுப் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, வௌ்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: