News Just In

10/25/2020 01:00:00 PM

ஊரடங்கு சட்டம் தொடர்பாக இராணுவத்தளபதி சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய செய்தி!!


கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை நீக்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதும் நாளைய தினம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 56 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கடலோர பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் நேற்று இரவு 7 மணி முதல் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டிய, நாராம்மல, தும்மலசூரிய, பன்னல மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது வார இறுதி நாட்களில் மேலும் கடுமையாக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுமார் 11 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: