நாட்டில் மீண்டும் சிலருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் மறுபடியும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் முன்னே்றபாடாக பொருட்களை கொள்வனவு செய்வது மாத்திமின்றி அச்சத்திலும் வாழ்கின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் எமது செய்தி பிரிவு காவல் துறை ஊடகப்பேச்சாளரிடம் தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், சிலரால் இவ்வாறான போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவம், அதில் எந்தவித உண்மையம் இல்லை எனவும் பதிலளித்தார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவேண்டுமாயில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினூடாக பதில் காவல் துறைமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் காவல் துறை ஊடகப்பேச்சாளரினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், கொரேனா தொடர்பில் போலியான தகவல்களை சமூகத்தில் பரப்பும் தரப்பினரை கண்டறியுமாறு அரசாங்கம் பாதுகாப்பு பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
மக்களை தேவையற்ற குழப்பங்களுக்கு உட்படுத்தும் வகையிலும் ஏமாற்றும் வகையிலும் போலித் தகவல்கள் பரப்பபடுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம் விடுமுறை தினத்தை அறிவிப்பதற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலித் தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன.
எனினும், இதுவரை அவ்வாறான எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் போலியான தகவல்களுக்கு ஏமாறாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அவர்களில் ஓமானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேரும், கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய ராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதிகளை சேர்ந்த 2 பேரும்,
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொவிட்19 தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய கண்டி - குண்டசாலையை சேர்ந்த 2 பேருக்கும் , சேனபுர புனர்வாழ்வு மையத்தினை சேர்ந்த 4 பேருக்கும், கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுதியானவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் ஐந்து பேருக்கும் நேற்று கொரோனா தொற்றுறுதியானது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் 666 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொவிட் - 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக அதிகரித்துள்ளது.

No comments: