முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையம் மற்றும் பகல் பராமரிப்பு வசதிகளை கொண்ட பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக உலக வங்கியின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது.
உலக வங்கியின் 8.2 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற இககட்டடத்திற்கான அடிக்கல்லினை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நாட்டி வைத்தார்.
இப்புதிய நிலையத்தினூடாக அரச உத்தியோகத்தர்கள் கடமைக்குச்செல்லும்வேளைகளில் அவர்களின் பிள்ளைகளைபராமரிக்கவசதியற்றவர்களின் முன்பிள்ளப்பருவ பிள்ளைகளுக்கு பகல்பராமரிப்பு ,கற்றல்வசதிகள்,ஆளுமைவிருத்தி பயிற்சிகள்,மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் தேகாரோக்கிய பயிற்சிகளும்வழங்க வசதி செய்யப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி முரளிதரனின் ஒழுங்கமைப்பில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன் மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜ் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

No comments: