மேற்படி சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
செவ்வாய் கிழமை அன்று சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரும் அவரது நண்பரும் மட்டக்களப்பு நகரை நோக்கி ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பொழுது குறித்த கல்லடி மீன் சந்தைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவைக்கு முன்னால் பாதசாரிகள் கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொழுது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த பட்டா ரக வாகனத்தால் மோதுண்டு இருவரும் தூக்கி விசப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னால் இருந்து வந்த கல்லடி நாவற்குடா மேல்மாடி வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய தர்மலிங்கம் ஷகிர்தன் என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
மேலும் இவ்விபத்துச் சம்பவத்துக்கு காரணமான பட்டா ரக வாகனத்தின் சாரதியும் அவருடைய சகாவும் சம்பவதினம் மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டி வந்த நிலையில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும் விபத்து நிகழ்ந்தவுடனே குடிபோதையில் இருந்த சாரதி வாகனத்தை வேகமாக செலுத்திச் சென்ற நிலையில் கல்லடிப் பாலத்திற்கருகில் வைத்து பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரது சகா வாகனத்திலிருந்து குதித்துத் தப்பியோடியுள்ளார்.
குறித்த சாரதியும் அவரது சகாவும் கல்லடி பாலத்திற்கருகில் குறித்த வாகனத்திலே தர்பூசணி பழ வியாபாரம் செய்பவர்கள் எனவும் சம்பவதினம் வியாபார நடவடிக்கைகள் முடிந்து மது அருந்தியவாறு வாகனம் ஓட்டி வந்த நிலையிலே இளைஞர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்ட வாகனத்தின் சாரதி புதன் கிழமை (8) மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும் இன்று மாலை (9) குறித்த இளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து இளைஞனின் மரண பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றவுடன் சாரதி மீண்டும் கைதுசெய்யப்படுவார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments: