News Just In

6/20/2020 10:49:00 PM

சட்டவிரோத மணல் அகழ்வு..- துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி


யாழில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் யாழ்ப்பாணம், முகமாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

முகாமாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்தாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: