News Just In

6/20/2020 12:43:00 PM

மட்டக்களப்பில் வாக்குகள் எண்ணும் பரீட்சார்த்த ஒத்திகை நிகழ்வு

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்  பரீட்சார்த்த ஒத்திகை நிகழ்வு இன்று (20.06.2020) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன்  தலைமையில் நடைபெற்ற வாக்கெண்ணும் பரீட்சார்த்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா களவிஜயத்தினை மேற்கொண்டு மேற்பார்வையிட்டார்.

வாக்கெண்ணும் ஊழியர்கள்  பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி இந்திராவதி மோகன் அவர்களின் நெறிப்படுத்தலில் வாக்குகளை தரம்பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் பாவிக்கப்படவுள்ள வாக்குச்சீட்டின் அளவுமுறைக்கு ஒப்பான மாதிரி வாக்கு சீட்டினை பயன்படுத்தி இந்த ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நோய்தொற்று காரணமாக பாதுகாப்பு அம்சங்களுடன் சமூக இடைவெளியினை பேணியவாறு குறித்து பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


























No comments: