News Just In

6/21/2020 01:09:00 PM

நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு


வத்தளை - திக்கோவிட கடற் பரப்பில், நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை கடற் பரப்பில் 5 பேர் நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கமைய, இராணுவத்தினர் பிரதேச மக்கள் மற்றும் காவற்துறை இணைந்து 4 பெண்கள் மற்றும் ஆண் நபர் ஒருவரை மீட்டு றாகமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது மூன்று பெண்களும், ஆண் நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.

இதனிடையே , கவலைக்கிடமான முறையில் பெண் ஒருவர் றாகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 16 வயதுடைய சிறுமி மற்றும் 14 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மற்றைய இரு பெண்கள் 20 மற்றும் 30 வயதுடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சடலங்கள் றாகமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வத்தளை காவற்துறை மே

No comments: