News Just In

6/26/2020 10:02:00 AM

கொரோனா தொற்றிய 09 பேர் தொடர்பிலான விபரங்கள் வெளியாகின


நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் இறுதியாக கொரோனா தொற்றுறுதியான 3 பேர் பூசா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய 6 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்பட்டிருந்த கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 40 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 397 ஆக குறைவடைந்துள்ளது.

No comments: