News Just In

5/08/2020 03:24:00 PM

சஹ்ரான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் பிடிபட்டார்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை நேற்று முன்திமனம் புதன்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து விசாரணைக்காக கொழும்பு 4 மாடிக்கு கொண்டு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெடி விபத்து ஒன்றில் சஹ்ரானின் சகோதரனான முகமட் றில்வான் காயமடைந்து வைத்தியசாலைக்கு செல்லாமல் மறைந்து வைத்து ஒல்லிக்குளம் முகாமில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

அப்போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்த குற்றச்சாட்டில் அரச ஸ்தாபனம் ஒன்றில் கடமையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

No comments: