வருகின்ற 11 ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
அரச காரியாலயங்கள் மற்றும் தனியார் காரியாலயங்கள் அனைத்தும் இயங்கும், அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மூன்று மாவட்டங்களையும் இணைத்து போக்குவரத்து-பேருந்து சேவைகள் இடம்பெறும், இம் மூன்று மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்து இல்லை.
குறித்த மாவட்டங்களில் கடமைபுரியும் ஊழியர்கள் இப் போக்குவரத்து சேவையினை பயன்படுத்தலாம்.
மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை பின்பற்றுவது கட்டாயமானதாகும், தேவையிருந்தால் மாத்திரம் வெளியில் வரலாம்.
முடிவெட்டும் நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் தங்களது பிரதேச சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திறக்கலாம்,
உணவகங்களில் உணவு பொதிகளை வாங்கி செல்லும் நடைமுறையினை மாத்திரம் பின்பற்ற வேண்டும், போன்ற பல அறிவுறுத்தல்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் விடுக்கப்பட்டது.

No comments: