News Just In

5/23/2020 05:44:00 PM

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் அமைப்பினூடாக உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில் வாகரை புணாணை கிழக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்;ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.புஹாரி முஹமட் தலைமையில் புணாணை கிழக்கு கிராமத்தில் 30 குடும்பங்களுக்கும், நாவலடி, பாலைநகர், மாவடிச்சேனை கிராமத்தில் 85 குடும்பங்களுக்குமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: