News Just In

5/01/2020 01:33:00 PM

களுதாவளையில் நான்கு பிள்ளைகளின் தாய் நஞ்சருந்தி உயிரிழப்பு


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாய் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது

இதில் வன்னியார் வீதி,களுதாவளையைச் 55 வயதுடைய குமாரசாமி கோனேஸ்வதி என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் அவரின் மகளின் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவரின் உறவினர்கள் வீட்டுத்தோட்டத்திற்கு சென்று வந்திருந்தவேளையில் நஞ்சருந்திய நிலையில் இருந்ததாகவும் பின்னர் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்செல்லும் வழியில் இவர் மரணமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களின் பணிப்புக்கமைய திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: