அமைச்சுக்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர், மாவட்ட – பிரதேச செயலாளர்கள், அரச துறைகள், நிறுவனங்கள், அரச வங்கிகள், அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளரால் இந்தக் கோரிக்கை எழுத்துமூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக, அரசின் வருவான மூலங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டுகிறார்.
பொது சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மாதத்திற்கு சுமார் 100 பில்லியன் ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மே மாத சம்பளத்தை இந்த நோக்கத்திற்காக வழங்குவதாக ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறுகிறார். அவர் வெளியிட்ட கடிதத்தில் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழியர்களும் இந்த பணியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
சிலருக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவது கடினம் என்றாலும், அதில் அரைவாசி, ஒரு வார சம்பளம் அல்லது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடியும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற பங்களிப்புகளின் மூலம் பொது சேவையின் கௌரவத்தை வலுப்படுத்த உதவும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜெயசுந்தரா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments: