ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று மதியம் (28) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்தியாவின் பங்களூரில் இருந்துநேற்று 28ஆம் திகதி யுஎல்-1172 விமானத்தினூடாக 164 பேர் இலங்கை வந்துள்ளனர், அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கூறினர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 77பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இவர்களில் 75 பேர் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்திலும் 2 பேர் பூனானை தனிமைப்படுத்தல் மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதனுடன் சேர்த்து 28 தியதியளவில் மொத்தமாக 4526 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். ,
இராணுவத்தின் கீழுள்ள 31 நிலையங்களில் 3, 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் கொரோனா தொற்றிய கடற்படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமாக பழகியவர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
4/29/2020 10:12:00 AM
இராணுவத்தின் கீழுள்ள 31 நிலையங்களில் 3292 பேர் தனிமைப்படுத்தலில்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: