News Just In

4/29/2020 11:05:00 AM

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியினரால் தந்தை செல்வா நினைவு தினம் அனுட்டிப்பு


தமிழரசுக் கட்சியினுடைய ஸ்தாபகர் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவு தினம் ஏப்ரல் 26 அன்று தமிழ் அரசுக் கட்சியினரால் வருடா வருடம் அனுட்டிக்கப்டுகிறது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு தினமான இன்று(29.04.2020) மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அனுட்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியினுடைய பொது செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நடராஜா

மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள்,வாலிபர் முன்னணி மாநிலத் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர் தீபாகரன், செயலாளர் சசிகரன் உட்பட உறுப்பினர்கள் எனக் குறிப்பிடத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.சமூக இடைவெளியை பேணியவாறு அரசியல் பிரமுகர்கள் நிகழ்வினை அனுட்டித்தமை குறிப்பிடத்தக்கது.
























No comments: