News Just In

4/21/2020 10:37:00 PM

லண்டனில் கொரோனாவால் மரணமான வாழைச்சேனை பெண்ணின் சடலம் நாளை அடக்கம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்த வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட தாதி உத்தியோகத்தரான மிஹ்ராஜியா முஹைதீன் (வயது 56) என்பவரது ஜனாஸா நாளை புதன்கிழமை (22) லண்டனில் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்மணி, கொரோனா வைரஸ் காரணமாக லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (20) லண்டனில் மரணமடைந்தார்.

இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளைகளுமாக மூன்று பிள்ளைகளின் தாயான மிஹ்ராஜியா முஹைதீன் வாழைச்சேனையைச் சேர்ந்த முபாரக் என்பவரை திருமணம் செய்து 1990ம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வந்துள்ளார்.

இவரது இரண்டு பிள்ளைகள் திருமணம் செய்துள்ளனர் என்பதுடன் , கொரோனா வைரஸ் காரணமாக இவருடன் வசித்து வந்த கணவர் மற்றும் இளைய மகள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: