News Just In

4/21/2020 10:04:00 PM

இராமகிருஷ்ண மிஷனால் வெருகல் மற்றும் கிரான் பிரதேசங்களில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், இதில் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் நிருவாகத்தினர் வெருகல் மற்றும் கிரான் பிரதேச பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.

இதன்படி வெருகல் பிரதேசத்தில் 725 குடும்பங்களுக்கும், கிரான் பிரதேசத்தில் 370 குடும்பங்களுக்குமாக மொத்தம் 1095 குடும்பங்களுக்கு இந்த உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் குறித்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் அனுமதிக்கு அமைவாக குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் உடனான குழு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்.






No comments: